Ad Code

Responsive Advertisement

தமிழில் கதிர், மலையாளத்தில் ஜோஜு ஜார்ஜ்: கவனம் ஈர்க்கும் ‘யூகி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

நடிகர்கள் கதிர், நட்ராஜ், நரேன் நடித்துள்ள ‘யூகி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

இந்த ஆண்டு வெளியான ‘சர்பத்’ படத்திற்குப் பிறகு நடிகர் கதிர் ‘யூகி’ என்ற சஸ்பென்ஸ், த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில், கதிருடன் நட்ராஜ், நரேன் இணைந்து நடிக்கிறார்கள். ஹீரோயின்களாக, ’கயல்’ ஆனந்தி, ஆத்மியா, பவித்ரா லட்சுமி நடிக்கிறார்கள். பாடல்களுக்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்க, டான் வின்சென்ட் பின்னணி இசையமைக்கிறார்.

image

தமிழ், மலையாளத்தில் உருவாகும் இந்தத் த்ரில்லர் படத்தில், மலையாளத்தில் கதிர் கதாபாத்திரத்தில் ஜோஜு ஜார்ஜ் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நரேனுடன் நட்ராஜ் கதாபாத்திரத்தில் ஷர்புதின் நடிக்கிறார். சமீபத்தில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான ‘ஜகமே தந்திரம்’ படத்தில் ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் கவனம் ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், கதிர், நரேன், நட்ராஜ் உள்ளிடோர் மிரட்டல் பார்வையுடன் பார்க்க, கயல் ஆனந்தி, பவித்ரா லக்‌ஷ்மி, ஆத்மியா புகைப்படங்கள் தலைகீழாக கொடுக்கட்டுள்ளது. வித்தியாசமான போஸ்டரே எதிர்பார்ப்பை தூண்டியிருக்கிறது. இரண்டு மொழிகளிலுமே இயக்குநர் ஜாக் ஹாரிஸ் இயக்குகிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3g2SYs4

Post a Comment

0 Comments