Ad Code

Responsive Advertisement

பிரஷாந்த்தின் ‘அந்தகன்’ பட டப்பிங் பணிகளைத் துவக்கிய படக்குழு

அந்தாதூன்’ தமிழ் ரீமேக் ‘அந்தகன்’ படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன.

தேசிய விருதுகளைக் குவித்த ‘அந்தாதூன்’ இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் பிரஷாந்த் நடித்துள்ளார். பிரஷாந்தின் அப்பா தியாகராஜனே இப்படத்தை இயக்கி வருகிறார். ’அந்தாதூன்’படத்தின் தபு கதாபாத்திரத்தில் நடிகை சிம்ரனும், ராதிகா ஆப்தே கதாபாத்திரத்தில் பிரியா ஆனந்த்தும் நடிக்கிறார்கள்.

image

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.சமுத்திரகனி, வனிதா விஜயகுமார், கார்த்திக் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். கொரோனா ஊரடங்கிற்கு முன்பு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு, சமீபத்தில் மீண்டும் தொடங்கி கடந்த வாரம் நிறைவடைந்தது.

image

இந்த நிலையில், இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன. டப்பிங்கில் நடிகர் கார்த்திக், லீலா சம்சன், பூவையார், மனோ பாலா, நடிகர் பிரஷாந்த் உள்ளிடோர் கலந்துகொண்டு டப்பிங் பேசி வருகின்றனர். அவர்கள் டப்பிங் பேசும் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டு வருகிறது.

image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/37vk46o

Post a Comment

0 Comments