’கேஜிஎஃப்’ இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துவரும் ‘சலார்’ படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் துவங்கியுள்ளது.
’ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் பிரபாஸ் ’கேஜிஎஃப்’இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் ‘சலார்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின், முதற்கட்டப் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்று வந்தது. பின்பு, கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது, படப்பிடிப்பு நடத்த அரசு அனுமதி அளித்துள்ளதால் ‘சலார்’ படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மீண்டும் தொடங்கியுள்ளது.
பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இருவரின் காட்சிகள்தான் தற்போது ஹைதராபாத்தில் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது, படப்பிடிப்பு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதேசமயம், பாலிவுட் நடிகை காத்ரினா கைஃப்பும் இப்படத்தில், மற்றொரு நாயகியாக நடிக்கவிருக்கிறார் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகும் ’சலார்’ படம் தெலுங்கு மொழி மட்டுமல்லாமல், தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3yBQNmR
0 Comments