
பிரபுதேவா - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.
’கத சொல்லப் போறோம்’, ‘குலேபகாவலி’, ஜோதிகாவின் ‘ஜாக்பாட்’ உள்ளிட்டப் படங்களை இயக்கிய இயக்குநர் கல்யாண் அபிஷேக் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் புதிய படத்தை இயக்குகிறார்.

இதே, தயாரிப்பு நிறுவனம்தான் நயன்தாரா நடிக்கவிருக்கும் இரண்டு புதிய படங்களைத் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, ‘குலேபகாவலி’ படத்தில் காமெடியில் கவனம் ஈர்த்த இயக்குநர் கல்யாண் மீண்டும் பிரபுதேவாவுடன் இணைந்திருப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

இந்தப் படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். ஏற்கனவே, பிரபுதேவாவுக்கு ஜோடியாக ‘லக்ஷ்மி’ படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். இவர்களுடன் தேவதர்ஷினி, யோகிபாபு உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், இன்று இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று புதுச்சேரியில் தொடங்கியுள்ளது. கல்யாண் இயக்கிய முந்தைய திரைப்படங்கள் போலவே இந்தப் படமும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3jxr60j



0 Comments