Ad Code

Responsive Advertisement

ஜூனியர் என்டிஆர் - கொரட்டலா சிவாவின் ‘என்டிஆர் 30’ படத்திற்கு இசையமைக்கும் அனிருத்?

தெலுங்கின் முன்னணி இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கும் ’என்டிஆர் 30 ’ படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் நடித்துவரும் ஜூனியர் என்டிஆர் அடுத்ததாக தெலுங்கின் முன்னணி இயக்குநரான கொரட்டலா சிவா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்குதான், அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.

கடந்த 2013 ஆம் ஆண்டு பிரபாஸ் நடித்த ‘மிர்ச்சி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் கொரட்டலா சிவா. இப்படம் சூப்பர் ஹிட் அடிக்கவே, மகேஷ் பாபுவின் ‘ஸ்ரீமந்துடு’, ‘பரத் எனே நேனு’ என இரண்டு படங்களைக் இயக்கி, அதையும் சூப்பர் ஹிட் ஆக்கினார்.

அடுத்ததாக, மோகன்லால், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் இயக்கிய ‘ஜனதா கரேஜ்’ படமும் வெற்றி பெற்றது. இதுவரை நான்கே படங்களை இயக்கி தெலுங்கின் முன்னணி இயக்குநராக இருக்கும் கொரட்டலா சிவா, தற்போது சிரஞ்சீவியும் அவரது மகன் ராம் சரணும் நடிக்கும் ’ஆச்சார்யா’ படத்தை இயக்கி தற்போது இயக்கி முடித்துள்ளார். விரைவில் இப்படம் வெளியாகவிருக்கிறது.

image

இந்த நிலையில், கொரட்டலா சிவா வரும் அக்டோபர் மாதத்திலிருந்து ஜுனியர் என்டிஆர்ரின் ’என்டிஆர் 30’ படத்தையும் இயக்கவிருக்கிறார். இப்படத்திற்கு, அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியிருப்பதாகவும் விரைவில் இதற்கான அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. மேலும், ‘மாஸ்டர்’ பாடல்கள் வெற்றிக்குப்பிறகு அனிருத்தின் சம்பளம் உயர்ந்துள்ளதாகவும், இப்படத்திற்கு அனிருத்  சம்பளமாக நான்கரை கோடி கேட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3yL2BmL

Post a Comment

0 Comments