Ad Code

Responsive Advertisement

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு': 2ஆவது லுக் போஸ்டர் வெளியீடு

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் "வெந்து தணிந்தது காடு" திரைப்படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' படத்திற்குப் பிறகு சிம்பு - கெளதம்மேனன் கூட்டணி 'வெந்து தணிந்தது காடு' படத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். சிம்புவின் 47-வது படமாக எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதையில் உருவாகும் இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். தாமரை பாடல்கள் எழுதுகிறார். ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். முற்றிலும் கிராமத்து பின்னணியில் வித்தியாசமான ஆக்‌ஷன் த்ரில்லரில் உருவாகும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு திருச்செந்தூரில் தொடங்கியது.

image

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கெனவே வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில், முதற்கட்டப் படப்பிடிப்பு முடிந்ததையடுத்து இன்று இரண்டாவது லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சிம்பு ஓர் அறையில் பல இளைஞர்களுடன் கவலையுடன் அமர்ந்திருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. அதோடு, இப்படத்தில் சிறுவயது தோற்றத்திற்காக சிம்பு 15 கிலோ எடையைக் குறைத்துள்ளார்.

image

‘சிம்புவா இது’ என்று ஆச்சர்யப்படும் அளவுக்கு உடல் மெலிந்து உண்மையிலேயே 16 அல்லது 17வயது சிறுவனின் தோற்றத்தை கொண்டு வந்துள்ளார். இன்று படக்குழு வெளியிட்டுள்ள புகைப்படத்திலும் சிம்பு சிறுவன் போன்ற தோற்றத்திலேயே இருக்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3gEyXsm

Post a Comment

0 Comments