பிரபாஸ் படத்தில் நடித்துவரும் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் கிரீன் இந்தியா சவாலை ஏற்று படப்பிடிப்பில் மரக்கன்றுகளை நட்டுள்ளார்.
கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கில் ஷூட்டிங் இல்லாததால் நடிகர்கள் பலர் கிரீன் இந்தியா சேலஞ்ச் செய்தனர். தெலுங்கின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு அவரது பிறந்தநாளையொட்டி மரக்கன்றை நட்டதோடு, நடிகர் விஜய்யை கிரீன் இந்தியா சவாலுக்கு அழைத்தார். நடிகர் விஜய், ஸ்ருதி ஹாசன், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் கிரீன் இந்தியா சவாலை ஏற்று மரக்கன்றுகளை நட்டனர்.
இந்த நிலையில், தற்போது, ’பிரபாஸ் 21’படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் அமிதாப்பச்சன் ஹைதராபாத்தில் தங்கி ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகிறார். இப்படத்தை தேசிய விருதுகளை குவித்த ‘மகாநடி’ இயக்குநர் நாக் அஷ்வின் இயக்குகிறார். தீபிகா படுகோனே ஹீரோயினாக நடிக்கிறார்.
இந்த நிலையில், ஹைதராபாத்தில் இருக்கும் நடிகர் அமிதாப்பச்சனுக்கு தெலங்கானாவைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி சந்தோஷ் குமார் கிரீன் இந்தியா சவால் விடுத்திருந்தார். அதனை, ஏற்று படப்பிடிப்பில் மரக்கன்றை நட்டார் அமிதாப்பச்சன். அவரது அருகில் தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனாவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2UTMjZR
0 Comments