அரிய முதுகெலும்பு தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பேபி மித்ராவின் மருத்துவ சிகிச்சைக்காக நடிகர் சத்யராஜ், தயாரிப்பாளர் தாணு உள்ளிட்டவர்கள் நிதி அளிக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவரின் 1 வயது 11 மாதங்களே ஆன மித்ரா என்ற குழந்தை அரிய முதுகெலும்பு தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. குழந்தை மித்ராவுக்கு மரபணு மாற்று சிகிச்சை செய்து உயிரைக் காப்பாற்ற சுவிட்சர்லாந்து நாட்டில் மட்டுமே கிடைக்கும் 16 கோடி ரூபாய் மதிப்புள்ள சோல்ஜென்ஸ்மா மருந்தால் மட்டுமே முடியும். உலகின் அதிக விலையுயர்ந்த மருந்துகளில் இதுவும் ஒன்று. இதனால், பலத்துறை பிரபலங்களும் குழந்தை மித்ராவின் உயிரைக் காப்பாற்ற தேவைப்படும் நிதியை அளிக்குமாறு தங்கள் சமூக வலைதளங்களில் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். கிரிக்கெட் வீரர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து தங்கள் ட்விட்டர் பக்கங்களில் பகிர்ந்தார்கள்.
இந்த நிலையில், நடிகர் சத்யராஜ், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு உள்ளிட்டவர்கள் உதவி செய்ததோடு நிதியளிக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். நடிகர் சத்யராஜ், “எனது நண்பர், மித்ராவின் மருத்துவ அறிக்கையை எனக்கு அனுப்பினார். 16 கோடி என்பது பெரியத்தொகை. என்னால் ஆன உதவியை செய்துவிட்டேன். உங்களால் ஆன உதவியை குழந்தைக்கு செய்யுங்கள்” என்று வீடியோ வெளியிட்டார். அவரது வீடியோவை பகிர்ந்துள்ள தயாரிப்பாளர் தாணுவும் குழந்தையின் மருத்துவச் செலவுக்கு நிதியளிக்குமாறு கோரிக்கை வைத்திருக்கிறார்.
Baby Mithra suffers from a rare disorder called Spinal Muscular Atrophy. A one-time Gene Replacement therapy is required to save the kid's life and needs a lot of funds. Let's unite and support this cause to #savemithra #mithrafightssma For more details https://t.co/7mYNcXSD4U pic.twitter.com/MFM2OqC8SB
— Kalaippuli S Thanu (@theVcreations) July 3, 2021
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3xjdhIC
0 Comments