ஒளிப்பரப்பு சட்டத்திருத்த வரைவு மசோதா கருத்துச் சுதந்திரத்திற்கு ஒரு பெரிய அடியாக இருக்கும் என்று இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் கருத்து தெரிவித்திருக்கிறார்.
ஒளிபரப்பு சட்ட திருத்த வரைவு மசோதா கடந்த 18-ம் தேதி மத்திய அரசு வெளியிடப்பட்டதில் இருந்தே இந்தியா முழுக்க உள்ள பல திரைக் கலைஞர்கள் தங்களுடைய எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். அந்தவகையில், இயக்குநர் வெற்றிமாறன், அனுராக் காஷ்யப், நந்திதா தாஸ், பர்ஹான் அக்தர் உள்ளிட்ட 1400 கலைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதினர். அதில், ஏற்கனவே, கலைஞர்கள் பல்வேறு அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கும் சூழலில், இந்த புதிய சட்ட திருத்த வரைவு அதனை இன்னும் வலுவாக்கும் என குறிப்பிட்டிருந்தனர். மேலும், தணிக்கை சான்றிதழ் தொடர்பாக முடிவெடுக்கும் உச்ச அதிகாரம் மத்திய அரசுக்கு இருப்பது, கருத்து சுதந்திரத்தை கேள்விக்குள்ளாக்கும் செயல் எனவும் அவர்கள் கண்டித்திருந்தனர்.
நடிகர் கமல்ஹாசன் சினிமா, ஊடகம், கல்வி ஆகிய மூன்றும் இந்தியாவில் பலரும் அறிந்த மூன்று குரங்குகளாக மட்டுமே இருக்க முடியாது எனவும், அதனால், வரவிருக்கும் தீமைக்கு எதிராக குரல் கொடுப்பதே ஜனநாயகத்தை காக்கும் சிறந்த மருந்தாக இருக்கும் எனவும் குறிப்பிட்டு புதிய ஒளிபரப்பு சட்ட திருத்த வரைவிற்கு எதிரான தன் நிலைப்பாட்டை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நடிகர் சூர்யாவும் ஒளிபரப்பு ஒளிப்பரப்பு சட்டத்திருத்த வரைவு மசோதாவுக்கு எதிராக ’சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தைக் காப்பதற்காகத்தான். அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல” என்று அழுத்தமாக பதிவு செய்தார்.
அவரைத்தொடர்ந்து தற்போது இயக்குநர் கார்த்திக் சுப்பராஜும் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒளிபரப்பு திருத்தச்சட்டம் அமல்படுத்தப்பட்டால் அது கலையுலக கருத்துச் சுதந்திரத்திற்கு ஒரு பெரிய அடியாக இருக்கும ” என்று குரல் கொடுத்திருக்கிறார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2UlDwPH
0 Comments