சென்னையிலிருந்து புதுச்சேரி வரை நடிகர் ரஹ்மான் சைக்ளிங் செய்துள்ளார்.
நடிகர் அருண் விஜய், ஆர்யா, சரத்குமார், ரஹ்மான் உள்ளிட்ட பல சினிமா நடிகர்கள் சைக்ளிங் செய்வதில் ஆர்வம் கொண்டவர்கள். நள்ளிரவிலும், அதிகாலையிலும் இவர்கள் சாலைகளில் சைக்ளிங் செய்யும் புகைப்படங்கள் அடிக்கடி வெளியாகி, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க நினைப்பவர்களுக்கு புதிய உத்வேகத்தை தரும். நடிகர் ஆர்யா வெளிநாட்டில் சைக்கிள் பந்தையத்தில் எல்லாம் கலந்துகொண்டுள்ளார்.
இந்த நிலையில், நடிகர் ரஹ்மான் சென்னையிலிருந்து, புதுச்சேரிவரை உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வூட்டும் வகையில் 110 கிலோ மீட்டர்கள் நண்பர்களுடன் சைக்ளிங் செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. ’அடுத்தமுறை 150 கிலோ மீட்டர்கள் சைக்ளிங் செய்வேன்’ என்றும் கூறியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2TBkLI7
0 Comments