Ad Code

Responsive Advertisement

”டெல்லி விமான நிலையத்தில் தெரு நாய்கள்"- அதிருப்தி தெரிவித்த ராஜமெளலி

டெல்லி விமான நிலையம் குறித்து இயக்குநர் ராஜமெளலி அதிருப்தி தெரிவித்திருக்கிறார்.

 ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் ராஜமௌலி இயக்கியுள்ள 'ஆர்ஆர்ஆர்' படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில்  எடுக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 13 ஆம் தேதி உலகம் முழுக்க தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது. டப்பிங் பணிகள், இரண்டு பாடல் காட்சி பணிகளில் பிஸியாக இருக்கிறார் இயக்குநர் ராஜமெளலி.

இந்த நிலையில், இன்று அதிகாலை டெல்லி விமான நிலையம் வந்தடைந்தவர், விமான நிலையம் மீதான தனது அதிருப்தியை தெரிவித்திருக்கிறார். தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் லூஃப்தானா விமானத்தின் மூலம் டெல்லி விமான நிலையத்திற்கு இரவு 1 மணிக்கு வந்தடைந்தேன். அப்போது, நான் உட்பட அனைத்துப் பயணிகளுக்கும் கொரோனா பிசிஆர் சோதனை விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டன. அனைவரும் விண்ணப்பப் படிவங்களை தரையில் அமர்ந்தும் சுவற்றில் வைத்து எழுதியும் பூர்த்தி செய்துகொண்டிருந்தார்கள். இப்படி செய்வது நன்றாக இல்லை. விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்ய மேஜைகள் தருவது ஒரு எளிய சேவை. அதோடு, விமான நிலையத்தின் வெளியில் தெரு நாய்கள் அதிகளவில் இருந்தன. இது வெளிநாட்டினருக்கு இந்தியா குறித்து  நல்லப் பார்வையைத் தராது. தயவு செய்து இதனைக் கவனிக்கவும்” என்று தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3wd20bd

Post a Comment

0 Comments