கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படத்திற்கு ‘கித்தார் கம்பி மேலே நின்று’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திற்காக இயக்குநர் மணிரத்னமும் ஜெயேந்திர பஞ்சாபகேசன் இருவரும் இணைந்து தயாரிக்கும் ஆந்தாலஜி படமான ‘நவரசா’ ஒன்பது திரைப்படங்களை உள்ளடக்கியது. கோபம், கருணை, தைரியம், வெறுப்பு, பயம், சிரிப்பு, காதல், அமைதி, வியப்பு ஆகிய ஒன்பது ரசங்களை (உணர்ச்சிகளை) அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. கெளதம் மேனன், கார்த்திக் சுப்பராஜ், கார்த்திக் நரேன் உள்ளிட்ட ஒன்பது இயக்குநர்கள் ஒவ்வொரு படத்தையும் இயக்குகிறார்கள்.
சூர்யா, விஜய் சேதுபதி, ஜி.வி பிரகாஷ் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். இந்த ’ஆந்தாலஜி ’ படத்தில் கெளதம் மேனன் இயக்கும் ஒரு படத்தில் ஹீரோவாக சூர்யா நடிக்கிறார். இந்தப் படத்திற்கு ‘கிடார் கம்பி மேலே நின்று’ தலைப்பு வைத்திருப்பதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே, ’வாரணம் ஆயிரம்’ படத்தில் சூர்யா கிடாரைத் தூக்கிக்கொண்டு வெளிநாடு பறக்கும் காட்சிகளை அமைத்திருந்தார் கெளதம் மேனன்.
தமிழில் அழகான தலைப்புகளை வைக்கும் கெளதம் மேனன் சமீபத்தில் சிம்புவுடன் இணைந்துள்ள படத்திற்கு ’நதிகளிலே நீராடும் சூரியன்’ என்று தலைப்பு வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3hv5DUC
0 Comments