Ad Code

Responsive Advertisement

"லவ் யூ ரஞ்சித்.. ’சார்பட்டா பரம்பரை’ பிரமாதமான படம்; பெருமையா இருக்கு" - வெங்கட் பிரபு

‘சார்பட்டா பரம்பரை’ படம் பார்த்துவிட்டு இயக்குநர் வெங்கட் பிரபு படக்குழுவினரை பாராட்டி இருக்கிறார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த ‘சார்பட்டா பரம்பரை’ நேற்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. இப்படத்தை பார்த்துவிட்டு இயக்குநர்கள் தங்கள் கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில், இயக்குநர் வெங்கட் பிரபு ’சார்பட்டா பரம்பரை’ படத்தைப் பாராட்டியிருக்கிறார். அதேவேளையில், இயக்குநர் பா.ரஞ்சித் வெங்கட் பிரபுவிடம்தான் உதவி இருக்குநராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

image

அவரது, ட்விட்டர் பக்கத்தில், “லவ் யூ ரஞ்சித். என்ன ஒரு பிரமாதமான படம். என்ன ஒரு மேஜிக். எனக்கு பெருமையாக இருக்கிறது. ஆர்யா வேற லெவல். கலை உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில் பின்னிவிட்டார். மிகவும் வலுவான தொழில்நுட்பக் குழு. நம் அனைவருக்கும் பெருமைமிக்கத் தருணம்” என்று பெருமையுடன் பாராட்டியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3zxs0QV

Post a Comment

0 Comments