
ராஜமௌலி இயக்கத்தில் உருவாகிவரும் ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார்.
பாகுபலி படத்தை தொடர்ந்து ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் ஆர்.ஆர்.ஆர் படத்தை எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கி வருகிறார். இதற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. குறிப்பாக படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்களை படமாக்கும் வேலைகள் நடைபெற்று வருகின்றன. அதில் ஒரு பாடலை தமிழ் இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார்.

இந்தத் திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகின்றது. எனவே தமிழில் இடம்பெறும் ஒரு பாடலை அனிருத்தை இசையமைப்பாளர் கீரவாணி பாட வைத்துள்ளார். அந்தப் பாடல் ஆர்.ஆர்.ஆர் படத்தின் பிரமோஷன் நிகழ்வுக்கு பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. எஸ்எஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகிவரும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் அக்டோபர் 13-ஆம் தேதி வெளியாகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2UFc3Jt



0 Comments