
ஷங்கர்- ராம் சரண் படத்திற்கு இசை அமைப்பாளராக இணைந்திருக்கிறார் இசையமைப்பாளர் தமன்.
’இந்தியன் 2’படப்பிடிப்பு சர்ச்சையில் இருப்பதால் இயக்குநர் ஷங்கர் ‘ராம் சரண் 15’ படத்தை சமீபத்தில் அறிவித்தார். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். கடந்த வாரம் சென்னை வந்திருந்த ராம் சரண், தில் ராஜு ஆகியோர் ஷங்கரை சந்தித்து மேலும் உறுதிப்படுத்தினர்.இப்படத்திற்கு, கொரியோகிராஃபராக ஜானி மாஸ்டர் பணிபுரிகிறார். இந்த நிலையில், தமிழ், தெலுங்கின் முன்னணி இசையமைப்பாளரான தமன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2003-ஆம் ஆண்டு வெளியான ஷங்கரின் ‘பாய்ஸ்’ படத்தில் நடிகராக அறிமுகமான தமன் தற்போது அவர் படத்திற்கே இசையமைக்கிறார். மேலும், தமன் ஏற்கனவே, ராம் சரணின் ‘புருஸ்லீ’ படத்திற்கும் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3kyhAfE



0 Comments