Ad Code

Responsive Advertisement

'உறியடி’ விஜய்குமார் நடிக்கும் புதிய படம்: இன்று பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு

’உறியடி’ விஜய்குமார் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.

கடந்த 2016 ஆம் ஆண்டு 'உறியடி' படத்தின் மூலம் நடிகராகவும் இயக்குநராகவும் அறிமுகமானார் விஜய்குமார். சாதி அரசியலைப் பற்றி பேசிய 'உறியடி' வெகுவாக கவனத்தை ஈர்த்து விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றது. அதனைத்தொடர்ந்து, நடிகர் சூர்யா தயாரிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு 'உறியடி 2' படத்தை இயக்கினார்.இ ந்தப் படமும் கவனத்தை ஈர்த்தது. தனது இரண்டு படங்களிலுமே சமூக அக்கறையை வெளிப்படுத்திய இயக்குநர் என்ற அங்கீகாரமும் விஜய்குமாருக்கு கிடைத்தது.

image

கடந்த ஆண்டு வெளியான 'சூரரைப் போற்று' படத்தில் விஜய்குமார் வசனம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ’வானம் என்ன உன் அப்பன் வீட்டு சொத்தா’ போன்ற இவரது வசனங்கள் கொண்டாடப்பட்டது. விஜய்குமார் இயக்கும், நடிக்கும் படம் எப்போது வெளியாகும் என்று அப்டேட்டுக்காக, அவரது ரசிகர்கள் காத்திருந்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 'ரீல் குட் ஃபிலிம்ஸ்' தயாரிப்பில் விஜய்குமார் நடிக்கும் அடுத்தப் படத்தின் அறிவிப்பு வெளியானது. இப்படத்தை அவரது இரண்டு படங்களிலும் உதவி இயக்குநராக பணிபுரிந்த அப்பாஸ் இயக்குகிறார்.

இந்நிலையில், இன்று பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்image.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2VQqXgf

Post a Comment

0 Comments