
சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது.
'களவாணி’, 'வாகை சூடவா' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சற்குணம். இவர் இயக்கத்தில் இறுதியாக வெளியான 'களவாணி-2' திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை. இந்த நிலையில் அதர்வா நடிப்பில் புதிய திரைப்படத்தை இயக்க சற்குணம் ஒப்பந்தமாகியுள்ளார்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் அந்தப் படத்திற்கான வேலைகள் தற்போது பூஜையுடன் தொடங்கியுள்ளன. அதேபோல் படப்பிடிப்பை இந்த மாத இறுதி அல்லது ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் ஆரம்பிக்க படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர். சற்குணம் - அதர்வா இணையும் புதிய படத்தில் ராஜ்கிரண் மற்றும் ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சற்குணம் - அதர்வா கூட்டணியில் ஏற்கெனவே ‘சண்டி வீரன்’ என்ற திரைப்படம் வெளியானது. இந்த நிலையில் இரண்டாவது முறையாக இருவரும் கூட்டணி அமைத்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2UeJemQ



0 Comments