
’கேஜிஎஃப் 2’ டீசர் இதுவரை 200 மில்லியன் வியூஸ்களையும் 8 மில்லியன் லைக்ஸ்களையும் குவித்துள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ’கேஜிஎஃப்’ முதல் பாகம் வெற்றி பெற்றதால், தற்போது ’கேஜிஎஃப் 2’ இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்துள்ளார் இயக்குநர் பிரஷாந்த் நீல். யஷ் உடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கேஜிஎஃப் 2’ டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

டீசர் வெளியான 16 மணி நேரத்தில் புதிய சாதனையை படைத்தது. விஜய்யின் ’மாஸ்டர்’, ’ஆர்ஆர்ஆர்’, ’சர்கார்’ மற்றும் ’மெர்சல்’ படங்களின் டீசர்கள் முதல்நாளில் குவித்த லைக் சாதனைகளையெல்லாம் முறியடித்து ’கேஜிஎஃப் 2’டீசர் 3 மில்லியன் லைக்ஸ்களைக் குவித்தது. அதோடு, ‘கேஜிஎஃப் 2’ டீசர் வெளியான முதல் நாளில் 3 மில்லியன் லைக்குகளை குவித்த முதல் இந்திய திரைப்படம் என்ற சாதனையையும் படைத்தது.
இந்த நிலையில், இன்று ஜூலை 16 ஆம் தேதி ’கேஜிஎஃப் 2’வெளியாகும் என்று ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், தியேட்டர்கள் திறக்கப்படாததால் வெளியீட்டுத் தேதியை தள்ளி வைத்துள்ளது. இன்று படம் வெளியாகவிருந்ததை நினைவுப்படுத்தும் விதமாக இயக்குநர் பிரஷாந்த் நீல் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கேஜிஎஃப் 2’ டீசர் இதுவரை 200 மில்லியன் பார்வைகளையும், 1 மில்லியன் கமெண்ட்ஸ்களையும், 8 மில்லியன் லைக்ஸ்களையும் கடந்துள்ளதை பெருமையோடு பகிர்ந்திருக்கிறார். உலகில் இதுவரை வெளியான படங்களில் 8 மில்லியன் லைக்ஸ்களைக் குவித்த முதல் டீசர் என்ற பெருமை ’கேஜிஎஃப் 2’ படத்திற்கு கிடைத்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3en1Qbq



0 Comments