தமிழ்நாடு அரசின் தலைமைப் பொறுப்புகளில் தமிழாய்ந்த பெருமக்கள் நியமனம் செய்வது பாராட்டுக்குரியது என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
தமிழக காவல்துறையின் தலைவர் (டிஜிபி) பொறுப்பில் இருந்த டிஜிபி திரிபாதி ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர். அதேபோல, தமிழகத்தின் முதல் பெண் டிஜிபியாக பணியாற்றிய லத்திகா சரண் கேரளாவைச் சேர்ந்தவர். தமிழக டிஜிபியாக வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களை நியமிப்பது பலமுறை சர்ச்சையாகியுள்ளது. இந்நிலையில், தற்போது புதிய டிஜிபியாக பொறுப்பேற்றிருக்கும் சைலேந்திர பாபு ஐ.பி.எஸ் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவருக்கு பல தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துவரும் நிலையில், கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில்,
”தமிழ்நாட்டரசின் தலைமைப் பொறுப்புகளில் தமிழாய்ந்த பெருமக்கள் நியமனம் பெறுவது பேரியக்கத்தின் பெருங்கனவை நனவுசெய்வதாகும். பதவி கண்டவர்கள் பாராட்டுக்குரியவர்கள் பதவி தந்தவர்கள் நன்றிக்குரியவர்கள்” என்று பாரட்டியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2TcCcyL
0 Comments