Ad Code

Responsive Advertisement

"ஜேம்ஸ் பாண்ட்டாக விஜய்யை நடிக்கவைப்பேன்" - இயக்குநர் மிஷ்கின்

தன்னுடைய படத்தில் விஜய் நடித்தால் ‘ஜேம்ஸ் பாண்ட்’ கதாபாத்திரத்தில்தான் நடிக்க வைப்பேன் என்று இயக்குநர் மிஷ்கின் கூறியுள்ளார்.

இந்தியாவில் தற்போது க்ளப் ஹவுஸ் மற்றும் ட்விட்டர் ஸ்பேஸ் தளங்கள் பிரபலமடைந்துள்ளதால் சினிமாத்துறையினர், இத்தளங்களைப் பெரிதும் பயன்படுத்தி ரசிகர்களுடன் உரையாடி வருகிறார்கள். சமீபத்தில்கூட ‘ஜகமே தந்திரம்’, ‘மாநாடு’ படக்குழுவினர் உரையாடினார்கள். விஜய் பிறந்தநாளையொட்டி லோகேஷ் கனகராஜ், கீர்த்தி சுரேஷ், நெல்சன் திலீப்குமார் உள்ளிட்டக் குழுவினர் ட்விட்டர் ஸ்பேஸில் உரையாடி சிறப்பித்தனர். அந்த வகையில், இயக்குநர் மிஷ்கின் நேற்று ட்விட்டர் ஸ்பேஸில் ரசிகர்களுடன் உரையாடும்போது ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது, ’உங்கள் இயக்கத்தில் விஜய் நடித்தால், எந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பீர்கள்?’ என்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு,  ’ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில்தான் நடிக்க வைப்பேன்’ என்று பதிலளித்தார் மிஷ்கின்.

image

மேலும், ஒரு ரசிகர், ’பிசாசு 2’  படத்தில்  ஆன்ட்ரியாவின் நடிப்பு எப்படி? என்று கேட்டதற்கு, அந்த  படத்திற்காக நடிகை ஆன்ட்ரியா தேசிய விருதை வாங்குவார் என்றார்.

கடந்த ஆண்டு வெளியான ‘சைக்கோ’ பட வெற்றிக்குப் பிறகு ‘பிசாசு 2’ படத்தை இயக்கி வருகிறார் மிஷ்கின். ஆன்ட்ரியா, ’சைக்கோ’ படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்த ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்டவர்கள் நடிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3qicCV5

Post a Comment

0 Comments