Ad Code

Responsive Advertisement

”அமெரிக்காவிலிருந்து ரஜினி அழைத்தார்; அவர் குரலில் ஆரோக்கியம் இழையோடக் கண்டேன்”- வைரமுத்து

உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்ற ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்துவை தொலைபேசியில் அழைத்து பேசியிருக்கிறார். இதனை, உற்சாகமுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார் வைரமுத்து.

”கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நடிகர் ரஜினிகாந்த், அரசின் சிறப்பு அனுமதி பெற்று உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். மருத்துவ பரிசோதனை முடிந்து மூன்று வார காலம் அமெரிக்காவில் தங்கிய பின்பு சென்னை திரும்பவிருக்கிறார். அவர், அமெரிக்கா சென்றபோது போனில் அழைத்து வாழ்த்து சொன்னார் வைரமுத்து.

தற்போது, ரஜினி அமெரிக்கா சென்றபிறகு வைரமுத்துவுக்கு போன் செய்து பேசியுள்ளார். இதனை, பகிர்ந்துகொண்ட வைரமுத்து, ”அமெரிக்காவிலிருந்து ரஜினி அழைத்தார். மருத்துவச் சோதனை நல்ல வண்ணம் நடந்தது என்றார்; மகிழ்ந்தேன். அவர் குரலில் ஆரோக்கியம் - நம்பிக்கை இரண்டும் இழையோடக் கண்டேன். அவரன்பர்களின் மகிழ்ச்சிக்காகவே இதைப் பதிவிட்டுப் பகிர்கிறேன்” என்று உற்சாகமுடன் பதிவிட்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/35U4Ua3

Post a Comment

0 Comments