
இயக்குநர் ஷங்கர் – தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் ‘அந்நியன்’ தழுவல் சர்ச்சைகளுக்கிடையே படத்தை தயாரிப்பதை மீண்டும் உறுதி செய்துள்ளது பென் ஸ்டூடியோஸ்.
கடந்த 2005-ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெற்றி பெற்ற ‘அந்நியன்’ படத்தை பாலிவுட்டில் ரன்வீர் சிங் நடிப்பில் தழுவல் செய்ய உள்ளதாகவும், அந்த திரைப்படத்தை 'பென் ஸ்டூடியோஸ்' தயாரிக்கவிருப்பதாகவும் கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தார் இயக்குநர் ஷங்கர்.
In this moment, no one will be happier than me, bringing back the larger than life cinematic experience with @RanveerOfficial in the official adaptation of cult blockbuster Anniyan.@jayantilalgada @PenMovies pic.twitter.com/KyFFTkWGSL
— Shankar Shanmugham (@shankarshanmugh) April 14, 2021
ஆனால், ” ’அந்நியன்’ படத்தை செய்வதற்குரிய முறையான அனுமதியை பெறவில்லை. அந்தப் படத்தின் அனைத்து மொழிக்கான உரிமையும் தன்னிடமே உள்ளது என்றும், அந்தக் கதையை சுஜாதாவிடம் 5 லட்சம் ரூபாய் கொடுத்து முறையாக பெற்றுள்ளேன்” என்றும் ஆஸ்கார் ரவிச்சந்திரன் பென் ஸ்டூடியோஸுக்கும் ஷங்கருக்கும் நோட்டீஸ் அனுப்பினார். ஷங்கரும் ” ’அந்நியன்’ படத்தின் கதை திரைக்கதை எனக்கே சொந்தம். அந்நியன் கதை திரைக்கதையை எழுதித்தரக்கோரி நான் யாரிடமும் கேட்கவில்லை. வசனம் மட்டும் சுஜாதா எழுதினார்” என்று விளக்கம் அளித்திருந்தார்.
Dr. Jayantilal Gada (Pen Studios) introduces us to their impressive line-up this year. The studio is gearing up for their massive slate release, in cinemas near you.#BackToTheatres @penmovies @jayantilalgada #gangubaikathiawadi #BellBottom #rrrmovie #Attack@bhansali_produc pic.twitter.com/FoZNSRYX5I
— PEN INDIA LTD. (@PenMovies) June 17, 2021
இந்த சர்ச்சைகளுகம் இன்னும் முடியாத நிலையில், இன்று தயாரிப்பாளர் ஜெயந்திலால் கடாவின் பென் ஸ்டூடியோஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அந்நியன்’ படத்தின் ரீமேக்கை தயாரிப்பதை மீண்டும் உறுதி செய்துள்ளது. இயக்குநர் ஷங்கர் ‘அந்நியன்’ படத்தின் தழுவலைத்தான் எடுக்கப்போகிறார் என்று ட்விட்டரில் அறிவித்தார். ஆனால், இப்போது தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் ‘அந்நியன்’ ரீமேக் என்று போடப்பட்டுள்ளது.
இதன்படி, ஆஸ்கார் ரவிச்சந்திரனிடம்தான் கதை உரிமை உள்ளது என்பது தெளிவாகிறது. இதனுடன் பென் ஸ்டூடியோஸின் தயாரிப்பில் அடுத்தடுத்து வெளியாகும் படங்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அக்ஷய் குமாரின் ‘பெல்பாட்டம்’, ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’, ஜான் ஆபிரகாமின் ‘அட்டாக்’, ஆலியா பட்டின் ’கங்குபாய்’, கடைசியில் ‘அந்நியன்’ ஆகிய படங்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த 2005 ஆம் ஆண்டு ஜூன் 17 இதே நாளில் வெளியான ‘அந்நியன்’ வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. ரீமேக் ‘அந்நியன்’ வரும் 2022 ஆம் ஆண்டு வெளியாகவிருக்கிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/35uOdSI



0 Comments