Ad Code

Responsive Advertisement

மீண்டும் தொடங்கிய எஸ்.எஸ்.ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர். படப்பிடிப்பு

கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்ப்டடிருந்த பிரம்மாண்ட இயக்கநர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் ஆர்.ஆர்.ஆர் (RRR) திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது.

பாகுபலி படங்களைத் தொடர்ந்து எஸ்.எஸ். ராஜமௌலி தற்போது ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் ஆர்.ஆர்.ஆர் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதற்கான படப்பிடிப்பு கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஆனால் கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக, இரண்டு மாதங்கள் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது ஆர்.ஆர்.ஆர் படப்பிடிப்பை மீண்டும் ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளார் ராஜமவுலி.

image

அத்துடன் ஜூலை இறுதிக்குள் படப்பிடிப்பை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர். சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தை அக்டோபர் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் படப்பிடிப்பு கொரோனா பரவலால் பாதிக்கப்பட்டதால் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கின்றனர்.

இந்தப் படம் தெலுங்கு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகிறது. ஆர்.ஆர்.ஆர் படத்தை தமிழில் லைகா நிறுவனம் வெளியிடுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3janhQ2

Post a Comment

0 Comments