தெலுங்கு திரைப்படத் தொழிலாளர்களுக்கு இலவச தடுப்பூசியை வழங்கி இருக்கிறார் நடிகர் சிரஞ்சீவி.
தெலுங்கு ’சூப்பர் ஸ்டார்’ நடிகர் சிரஞ்சீவி, தனது அறக்கட்டளை மூலம் ஏழை எளியவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடர்ச்சியாக செய்துவருகிறார். சமீபத்தில்கூட, தமிழ் நடிகர் பொன்னம்பலத்தின் அறுவை சிகிச்சைக்கு 2 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று தெலுங்கு திரைப்படத்துறையைச் சேர்ந்த 24 யூனிட் தொழிலாளர்களுக்கும் அப்போலோ மருத்துவமனையுடன் இணைந்து தடுப்பூசிக்கான செலவுகளை ஏற்றுக்கொண்டு இலவச தடுப்பூசி வழங்கினார்.
Starting today #CoronaCrisisCharity (CCC) in collaboration with #Apollo247 & #ChiranjeeviCharitableTrust has commenced vaccination programme for Telugu film industry workers of 24 crafts, #MovieArtistsAssociation & #FilmJournalistsUnion pic.twitter.com/LtCcakmjgq
— Chiranjeevi Konidela (@KChiruTweets) June 7, 2021
சமீபத்தில், தெலுங்கு திரைப்பட தொழிலாளர்களுக்கும் சினிமா பத்திரிகையாளர்களுக்கும் நடிகர்களுக்கும் இலவச தடுப்பூசி வழங்கப்படும் என்று அறிவித்த சிரஞ்சீவி, சொன்னபடியே இன்று செயல்படுத்தியதற்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன.
சிரஞ்சீவியின் மருமகளும் நடிகர் ராம்சரணின் மனைவியுமான உபாசனா, அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டியின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3zatRM7
0 Comments