Ad Code

Responsive Advertisement

’குக் வித் கோமாளி’ அஸ்வின் படத்திற்கு அஜித் பட பாடல் டைட்டில்

’குக் வித் கோமாளி’ அஸ்வின், புகழ் நடிக்கும் படத்தின் தலைப்பை வெளியிட்டிருக்கிறது படக்குழு.

தமிழ் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கவனம் ஈர்த்தவர்கள் என்றால், அது சிவாங்கி, புகழ், அஸ்வின் உள்ளிட்டவர்கள்தான். இந்நிகழ்ச்சியில், பிரபலமடைந்ததால் சிவாங்கி, புகழ் இருவரும் சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தில் நடித்து வருகிறார்கள். புகழ் அஜித்தின் ‘வலிமை’ படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில்தான் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி முடிவடைந்தது.

image

இதனால், அஸ்வினும் புகழும் புதிய படத்தில் இணைந்துள்ளனர். அஸ்வின் ஹீரோவாகவும் புகழ் நகைச்சுவை நடிகராகவும் நடிக்கவுள்ள இப்படத்தின் அறிவிப்பு புத்தாண்டையொட்டி வெளியானது. இந்த நிலையில், இவர்கள் நடிக்கும் படத்திற்கு ‘என்ன சொல்ல போகிறாய்’  என்று தலைப்பு வைத்து அதிகாரபூர்வமாக வெளியிட்டிருக்கிறது படக்குழு. அஜித் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் சங்கர் மகாதேவன் குரலில் ‘ என்ன சொல்ல போகிறாய்’ பாடல் சிங்கிள்ஸ், டபுள்ஸ்களின் ஃபேவரைட். இப்பாடலின் தலைப்பையே வைத்துள்ளதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/366CYQl

Post a Comment

0 Comments