Ad Code

Responsive Advertisement

இந்தியா – நியூசிலாந்து கிரிக்கெட் போட்டியிலும் ‘வலிமை’ அப்டேட் கேட்ட ரசிகர்கள்

இந்தியா-நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போதும் அஜித் ரசிகர்கள் ‘வலிமை’ அட்டேட் கேட்டு அதிர வைத்துள்ளனர்.

 எச்.வினோத் இயக்கத்தில் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து போனி கபூர் தயாரித்து வரும் இப்படத்தின் எந்தவித அப்டேட்டும் இதுவரை வெளியாகாததால் அஜித் ரசிகர்கள் ’வலிமை’ அப்டேட் கேட்டு அடிக்கடி ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். இதனால், போனி கபூர் அஜித் பிறந்தநாளான கடந்த மே 1 ஆம் தேதி ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று அறிவித்தார். ஆனால், கொரோனாவை காரணம் காட்டி மற்றொரு நாளில் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என பின்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். தற்போது, கொரோனாவும் குறைந்துவிட்டதால் மீண்டும் வலிமை அப்டேட் கேட்கத்தொடங்கிவிட்டனர் ரசிகர்கள்.

இங்கிலாந்தில் நடைபெறும் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் அஜித் ரசிகர்கள் நேற்று ‘வலிமை அப்டேட்’ என்று எழுதிய பதாகைகளை தூக்கிக்காட்டினர். அதோடு பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர் அஸ்வினிடமும் ‘வலிமை’ அப்டேட் கேட்டுள்ளனர். இந்த புகைப்படங்களும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

image

 

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3vMTC1U

Post a Comment

0 Comments