Ad Code

Responsive Advertisement

“என் மகனுக்காக 3 கோடி ரூபாயில் சொகுசு கார் பரிசளித்தேனா?” - நடிகர் சோனு சூட் விளக்கம்

“என் மகனுக்காக 3 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு கார் எதுவும் வாங்கவில்லை” - நடிகர் சோனு சூட்

நடிகர் சோனு சூட் கொரோனா பொதுமுடக்க நாட்களில் எளிய மக்களுக்கு தேடி சென்று உதவிகளை வழங்கினார். இந்நிலையில் அண்மையில் 18 வயது நிரம்பிய அவரது மூத்த மகனுக்கு Mercedes-Maybach GLS 600 கார் ஒன்றை அவர் வாங்கிக் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியது. தந்தையர் தின அன்பளிப்பாக இந்த காரை சோனு சூட் வாங்கி கொடுத்துள்ளதாக சொல்லப்பட்டது. அதை அவர் இல்லை என மறுத்துள்ளார்.   

“என் மகனுக்காக விலை உயர்ந்து கார் ஏதும் வாங்கவில்லை. அந்த கார் எங்கள் வீட்டுக்கு சோதனை ஓட்டத்திற்காக கொண்டு வரப்பட்டது. அவ்வளவுதான். அந்த காரை சோதனை ஓட்டம் செய்தோம். அதுவும் தந்தையர் தினத்திற்காக நான் ஏன் எனது மகனுக்கு அன்பளிப்பு வழங்க வேண்டும். அவன்தான் எனக்கு அன்பளிப்பு கொடுக்க வேண்டும். 

அனைத்தையும் விட எனது இரு மகன்களும் என்னுடன் இந்த தந்தையர் தினத்தில் இருப்பதே எனக்கான சிறந்த அன்பளிப்பாக இருக்க முடியும். இருவரும் வளர்ந்துவிட்டனர். அதனால் அவர்கள் என்னுடன் இருப்பதுதான் மதிப்புமிக்க அன்பளிப்பு எனக்கு” என தெரிவித்துள்ளார் சோனு சூட். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3zDSi4L

Post a Comment

0 Comments