+2 தேர்வை ரத்துசெய்த முதல்வருக்கு கவிஞர் வைரமுத்து பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டதாவது, “
+2 பொதுத் தேர்வு என்றஉளவியல் போரிலிருந்து
மாணவ சமுதாயத்தை விடுவித்த
தமிழக அரசைப் பாராட்டுகிறேன்.
உயர்கல்வியா உயிரா
என்ற வினாவை முன்வைத்து
உயிரே என்று முடிவெடுத்ததில்
மாணவர்களின் பதற்றம் தணிந்தது.
+2 தேர்வு முடிவில்
முதலமைச்சருக்கு
நூற்றுக்கு நூறு” இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
+2 பொதுத் தேர்வு என்ற
— வைரமுத்து (@Vairamuthu) June 6, 2021
உளவியல் போரிலிருந்து
மாணவ சமுதாயத்தை விடுவித்த
தமிழக அரசைப் பாராட்டுகிறேன்.
உயர்கல்வியா உயிரா
என்ற வினாவை முன்வைத்து
உயிரே என்று முடிவெடுத்ததில்
மாணவர்களின் பதற்றம் தணிந்தது.
+2 தேர்வு முடிவில்
முதலமைச்சருக்கு
நூற்றுக்கு நூறு
முன்னதாக, கொரோனா 2 அலை காரணமாக மத்திய அரசு +2 சிபிஎஸ்இ தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது. அதனைத்தொடர்ந்து குஜராத், கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்களில் +2 தேர்வு ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில் தமிழகத்தில் +2 தேர்வை நடத்துவது தொடர்பாக கருத்துக்கள் கேட்கப்பட்டன. இதற்கு கல்வியாளர்கள், பொதுமக்கள் என பலரும் தேர்வு நடத்துவதற்கு ஆதரவாகவும், மறுத்தும் கருத்துகளை தெரிவித்தனர்.. இந்த நிலையில் நேற்று தமிழக அரசு +2 தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2T4AaAg
0 Comments