Ad Code

Responsive Advertisement

’கேஜிஎஃப் 2’ : டப்பிங் பணிகளை தொடங்கிய நடிகை மாளவிகா அவினாஷ்

கே.ஜி.எஃப் -2 படத்திற்கான டப்பிங் பணிகளை தொடங்கியிருக்கிறார் நடிகை மாளவிகா அவினாஷ். 

 கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ’கேஜிஎஃப்’ படத்தில், தொலைக்காட்சி ஆசிரியராக நடித்து கவனம் ஈர்த்தார் மாளவிகா. ஹீரோ ராக்கி (யாஷ்) குறித்து சொல்லப்படும்போதெல்லாம் சண்டைக்  காட்சிகளைவிட மாளவிகாவின் கண்கள் ஸூம் ஆவதே, அக்காட்சிகளை இன்னும் பில்ட் அப் ஆக்கும்.  சம்பவங்களை விவரிக்கும்போது ’ரொம்ப பின்னாடி போய்ட்டீங்க… இன்னும் கொஞ்சம் முன்னாடி வாங்க’ என்று பார்வையாளர்களுக்கு புரியும்படி கதையை கொண்டுசெல்லும் கோர்வையாளராக நடிப்பில் கவனம் ஈர்த்தார் மாளவிகா அவினாஷ். 

’கேஜிஎஃப்’ முதல் பாகம் வெற்றி பெற்றதால், தற்போது இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்துள்ளார் இயக்குநர் பிரஷாந்த் நீல். இப்பாகத்திலும், மாளவிகா அவினாஷ் நடித்துள்ளார். வரும் ஜூலை 16 ஆம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில், ’கே.ஜி.எஃப் 2’ படத்திற்காக  டப்பிங் பணிகளை தொடங்கி இருப்பதாக  தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளார் மாளவிகா. ’50 நாட்களுக்குப்பிறகு மீண்டும் ’கேஜிஎஃப் 2’ டப்பிங்கிற்காக பணிக்கு திரும்பியிருக்கிறேன்’ என்று உற்சாகமுடன் பதிவிட்டுள்ளார்.

image

 

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2TBqk98

Post a Comment

0 Comments