
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீனும் இணைந்து முகமது நபிகளை புகழும் வகையில் ஒரு பாடலை வெளியிட்டுள்ளனர்.
“தலா அல் பத்ரு அலாய்னா” எனும் இந்தப்பாடல் மக்களின் வேண்டுகோளை ஏற்று, மதீனா நகருக்கு முகம்மது நபிகள் (Pbuh), வருகைபுரிந்த போது மக்களால் பாடப்பட்டது. பெரும் வரலாற்றை உள்ளடக்கிய, மதீனா நகரில் உருவான இந்தப்பாடல் மிகவும் புகழ் பெற்றது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும், இசைப்புயல் AR ரஹ்மானின் மகன் AR அமீனும் இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர்.

இது குறித்து யுவன் சங்கர் ராஜா கூறும்போது, “ இந்ததருணத்தில் நான் மிக மகிழ்ச்சியாக உணர்கிறேன். “தலா அல் பத்ரு அலாய்னா” போன்ற தெய்வீக பாடலை இசையமைப்பது எனக்கு கிடைத்த மிகப்பெரும் பெருமை. எனது சகோதரர் AR அமீனுடன் இது போன்ற ஆன்மீக பாடலை இணைந்து பாடியது மிகப்பெரும் மகிழ்ச்சி. நம்மை சுற்றி எதிர்மறை எண்ணங்கள் சூழ்ந்திருக்க, இந்தப்பாடல் நம் ஆன்மாவில், மலர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கும்” என்றார்.

பாடகர் ஏ.ஆர் அமீன் கூறும் போது, “ நபிகளை போற்றும் தெய்வீகமான பாடலை அன்பு சகோதரர் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து பாடியது மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது. இந்த இனிய ஈகைத் திருநாள் அனைவரது வீட்டிலும், அன்பையும், நிம்மதியையும் அருளட்டும் என்றார். இந்தப்பாடல் மூலம் வரும் அனைத்து வருமானமும், ஏழை எளியோருக்கு அளிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2R8W8Bz



0 Comments