Ad Code

Responsive Advertisement

இயக்குநரும், நடிகருமான அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனா தொற்றால் மரணம்

இயக்குநரும், நடிகருமான அருண்ராஜா காமராஜின் மனைவி நேற்று கொரோனா தொற்றால் உயிரிழந்தார். 

கொரோனா இரண்டாம் அலையில் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், திரைத்துறையினர் மற்றும் அரசியல்வாதிகள் சிலரும் கொரோனா தொற்றால் உயிரிழந்து வருகின்றனர். இயக்குநர், நடிகர், பாடலாசியர் என பன்முகத்தன்மை கொண்டவர் அருண்ராஜா காமாராஜ். கபாலி படத்தில் இவர் எழுதிய ‘நெருப்புடா’ பாடல் பலரின் பாராட்டையும் பெற்றது.

தற்போது இந்தி படத்தை தமிழில் ரீமேக் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள அருண்ராஜாவின் மனைவி சிந்துஜா கொரோனா தொற்றால் நேற்று உயிரிழந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதியாகி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அருண்ராஜாவுக்கு திரைத்துறையினர் பலரும் தங்கள் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துவருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2SMohi2

Post a Comment

0 Comments