Ad Code

Responsive Advertisement

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் நடிகர் கெளதம் கார்த்திக்

நடிகர் கெளதம் கார்த்திக் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடும்போது, “ நான் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டேன். நாமும் நம்மை சுற்றியுள்ளவர்களும் பாதுக்காப்புடன் இருப்பதற்காக நாம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கொரோனா தொற்றை வெல்லும் மிகப்பெரிய ஆயுதமாக கொரோனா தடுப்பூசி உள்ளது. ஆனால் தடுப்பூசி குறித்து சமூகவலைதளங்களில் பரவும் தகவலால் ஆரம்பத்தில் தடுப்புசி செலுத்திக்கொள்ள மக்கள் எவரும் பெரிதாக முன்வரவில்லை. ஆகையால் தடுப்பூசி போட்டுக்கொள்வதின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது நடிகர் கெளதம் கார்த்திக்கும் தான் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

நடிகர் காத்தியின் மகனான கெளதம் கார்த்திக் மணிரத்னம் இயக்கிய ‘கடல்’படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து ‘வை ராஜா வை’, ‘ஒரு நல்லநாள் பார்த்து சொல்றேன்’ மிஸ்டர் சந்திரமெளலி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3fDtws6

Post a Comment

0 Comments