
நடிகை ரைசா தனது ட்விட்டர் பக்கத்தில் சீரமைந்த முகத்துடன் புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, விளம்பரத் துறையில் மாடலாக இருந்து, பின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழடைந்த நடிகை ரைசா வில்சன் தொடர்ந்து பல படங்களில் நடித்துவருகிறார். இந்த நிலையில் இவர் தோல்சிகிச்சை மருத்துவர் செந்தில் பைரவியிடம் ஃபேசியல் செய்ய சொன்னதாகவும், அவர் தனக்கு வேண்டாத சில சிகிச்சைகளை அளித்ததால், தனது முகம் வீங்கியதாகவும் புகார் அளித்தார்.
இதற்கு விளக்கம் அளித்த மருத்துவர் இருப்பக்கமும் சீரான அளவில் இல்லாத முக அமைப்பை சீர் செய்யும் dermal fillers சிகிச்சையே ரைசாவிற்கு அளிக்கப்பட்டது என்றும் ரைசா முகம் வீங்கியதால் தன்னிடம் அவர் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் கூறியிருந்தார். இதனையடுத்து ரைசா, முகம் வீங்கியதற்கு 1 கோடி இழப்பீடு வழங்கவேண்டும் என கோரிய நிலையில், மருத்துவரும் ரூ.5 கோடி இழப்பீடு கோரி வழக்குத்தொடுத்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2S7jrvo



0 Comments