Ad Code

Responsive Advertisement

’தனது குழுவிலுள்ள 25 குடும்பங்களுக்கு கண்களாக விளங்கியவர் கோமகன்’ - சேரன் புகழஞ்சலி

”கோமகன் மனதிலும் குரலிலும் முழுக்க தன்னம்பிக்கை கொண்டவர். அவரது குழுவில் உள்ள 25 குடும்பங்களுக்கு கண்களாக விளங்கியவர்” என்று உயிரிழந்த பாடகர் கோமகனுக்கு  ’ஆட்டோகிராஃப்’ படத்தில் வாய்ப்பளித்த இயக்குநர் சேரன் உருக்கமுடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில், ”வார்த்தைகள் இல்லை... மனதிலும் குரலிலும் முழுக்க தன்னம்பிக்கை கொண்ட மனிதர்... அவருடைய குழுவில் உள்ள 25 குடும்பங்களுக்கு கண்களாக விளங்கியவர்.. காலையில் எழுந்ததும் கேள்விப்பட்ட இந்த செய்தி நெஞ்சை நொறுக்கியது.. கோமகனின் ஆன்மா அமைதி கொள்ளட்டும்” என்று உருக்கமுடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

image

 கடந்த 2004 ஆம் ஆண்டு சேரன் இயக்கி, நடித்த ‘ஆட்டோகிராஃப்’ படத்தில் இடம்பெற்ற ’ஒவ்வொரு பூக்களுமே’ பாடலின் மூலம் உலகம் முழுக்க புகழ்பெற்றார் பாடகர் கோமகன்.  பரத்வாஜ் இசையில் இப்பாடலை எழுதிய பா.விஜய்க்கும், பாடகி சித்ராவுக்கும் தேசிய விருதுகள் கிடைத்திருந்தது. இப்பாடலில் நடித்ததோடு கடைசியில் உணர்வுப்பூர்வமாகப் பாடியும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் கோமகன். கடந்த 2019 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதும் இவருக்கு கிடைத்திருந்தது. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட ஆர்கெஸ்ட்ராவை வைத்திருந்த கோமகன் கடந்த ஆண்டு பரவிய கொரோனாவால் மேடை நிகழ்ச்சிகள் கிடைக்காமல் தனது குழுவோடு பாதிக்கப்பட்டிருந்தார். இயக்குநர் சேரனும் அப்போது அவர்களின் நிலைகுறித்து கேட்டறிந்தார்.

இந்நிலையில், 50 சதவீத கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பாடகர் கோமகன் கடந்த 12 நாட்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்பு இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை அயனாவரத்தில் உள்ள ஐ.சி.எஃப் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அதிக மூச்சுத்திணறல் ஏற்பட்டு இன்று அதிகாலை 1.30 மணியளவில் உயிரிழந்தார்.

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3nWeLEz

Post a Comment

0 Comments