Ad Code

Responsive Advertisement

கொரோனா பேரிடர்: 1 கோடி நிவாரண நிதி அளித்த விசாகன்-செளந்தர்யா ரஜினிகாந்த் தம்பதி!

 செளந்தர்யா ரஜினிகாந்த் அவரது கணவர் விசாகனும் இணைந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய்  நிதியுதவி அளித்துள்ளார்.

கொரோனா இரண்டாவது அலை காரணமாக நாளுக்குநாள் கொரோனா பாதித்தவர்கள் அதிகரித்து வருகிறார்கள். இதனையொட்டி, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பொதுமக்கள்,நிறுவனங்கள் நன்கொடை வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

image

அதனையொட்டி, ரஜினிகாந்த்தின் இளைய மகளும் இயக்குநருமான செளந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவர் விசாகனுடன் இணைந்து தங்களது ’அபெக்ஸ் லெபரட்ரீஸ்’ சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ரூ.1 கோடி நிவாரண நிதி அளித்துள்ளனர். இவர்களின் உதவிக்கு சமுக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3onY6u0

Post a Comment

0 Comments