
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதல்வரின் கொரோனா நிவாரண நிதி மற்றும் ஃபெப்சி தொழிலாளர் சங்கத்திற்கு நிதியுதவி அளித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்திவரும் நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் பொதுமக்களிடம் அரசிற்கு நிதியுதவி அளிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். அதனைத்தொடர்ந்து திரைப்பிரபலங்களான அஜித், சூர்யா, வெற்றிமாறன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் தங்களால் ஆன நிதியுதவியை அளித்துவருகின்றனர். அந்த வகையில் தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷூம் முதல்வர் நிவாரண நிதிக்கு 1 லட்சம் ரூபாயும், ஃபெப்சி தொழிலாளர் சங்கத்திற்கு 1 லட்சம் ரூபாயும் வழங்கியுள்ளார்.

‘அட்டகத்தி’ ‘காக்கா முட்டை’, ‘வடசென்னை’, ‘கனா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தர் ஐஸ்வர்யா ராஜேஷ்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3otdvsV



0 Comments