Ad Code

Responsive Advertisement

’ஹே சினாமிகா’ படத்திற்காக தமிழில் பாடகராக அறிமுகமாகும் துல்கர் சல்மான்!

நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துவரும் ‘ஹே சினாமிகா’ படத்தில் துல்கர் சல்மான் முதன் முறையாக உற்சாகமுடன் தமிழ் பாடலை பாடியிருக்கிறார். அந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

தமிழ் மட்டுமல்லாமல் இந்திய அளவில் முன்னணி டான்ஸ் மாஸ்டர்களில் ஒருவரான பிருந்தா மாஸ்டர் தற்போது இயக்குநராகவும் மாறியுள்ளார். அவர், இயக்கத்தில் துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் நடிக்கும் ‘ஹே சினாமிகா’ ஷூட்டிங் சமீபத்தில்தான் முடிந்தது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான மணிரத்னம் படங்களில் பிருந்தாதான் பெரும்பாலும் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றுவார். அதேபோல, கடந்த 2015 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்த ’ஓகே கண்மணி’ படத்திலும் பணியாற்றினார். ரிலையன்ஸ் நிறுவனம் முதன்முறையாக தமிழில் தயாரிக்கும் படம்’ ‘ஹே சினாமிகா’ என்பது குறிப்பிடத்தக்கது.

image

விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்திற்கு ’96’ படப்புகழ் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். மதன் கார்க்கி பாடல்கள் எழுதும் இப்படத்தில் துல்கர் ஒரு பாடலை உற்சாகமுடன் பாடியிருக்கிறார். பாடல் பாடும் துல்கர் சல்மானின் புகைப்படத்தைப் பகிர்ந்த பிருந்தா மாஸ்டர் “ஒரு பாடகராகவும் துல்கர் சல்மானின் புதிய அவதாரத்தை தமிழில் பார்ப்பீர்கள். அவரது தனித்துவமான ஆற்றலை பாடலுக்கு கொண்டு வந்துள்ளார். இந்தப் பாடலை 45 நிமிடங்களிலேயே பதிவு செய்தோம். கோவிந்த் வசந்தாவின் ஈர்க்கும் இசையும் மதன் கார்க்கியின் அழகான பாடல் வரிகளும் அருமையாக வந்துள்ளன” என்று பாராட்டியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2RBY0CF

Post a Comment

0 Comments