
‘கோப்ரா’ படம் ஓடிடியில் வெளியாவதாக தகவல் வெளியான நிலையில், அதுதொடர்பாக தயாரிப்பு நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான ‘டிமாண்டி காலனி’, நயன்தாரா நடிப்பில் வெளியான ‘இமைக்கா நொடிகள்’ படங்களை இயக்கியதின் மூலம் கவனம் ஈர்த்த அஜய் ஞானமுத்து, தற்போது விக்ரமுடன் ‘கோப்ரா’ படத்தில் இணைந்துள்ளார். இந்தப்படத்தில் விக்ரம் ஜோடியாக ‘கேஜிஎஃப்’பட புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். வில்லனாக பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்துள்ளார்.

கடந்த வருடம் மே மாதம் 22 ஆம் தேதி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் படத்தின் டீஸர் வெளியாகி சமூகவலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்றது.
Fake News !! https://t.co/RCbW2EuSZH
— Seven Screen Studio (@7screenstudio) April 10, 2021
இந்த நிலையில் ‘கோப்ரா’ திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக ட்விட்டரில் தகவல் வெளியானது. இந்தத் தகவலை தற்போது ‘கோப்ரா’ படத்தை தயாரித்துள்ள செவன் ஸ்கிரீன் ஸ்டியோ இதில் ஒரு பொய்யான தகவல் என்று கூறி தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3g2PG94



0 Comments