
மெர்சல், பிகில் உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஜிகே விஷ்ணுவின் திருமணம் இன்று நடைபெற்றது
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவான மெர்சல், பிகில் மற்றும் தெலுங்கில் வெளியான கிராக் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஒளிப்பதிவாளர் G.K.விஷ்ணு, மஹாலக்ஷ்மி என்பவரை இன்று திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது திருமணம் இன்று காலை சோழிங்கநல்லூரில் உள்ள இஸ்கான் கோயிலில் நடைபெற்றது. கொரோனா பாதுகாப்பு கருதி மணமகன் மணமகளின் பெற்றோர் மற்றும் மிக முக்கிய உறவினர்கள் நண்பர்கள் திருமண வைபவத்தில் கலந்து கொண்டனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2QZzBGA



0 Comments