மூத்த தமிழ் குணச்சித்திர நடிகர் செல்லதுரை நேற்று மாலை மாரடைப்பால் உயிரிழந்தார்.
தமிழில் ’தெறி’, ’மாரி’, ’கத்தி’, ’நட்பே துணை’ போன்ற பல திரைப்படங்களில் நடித்தவர் செல்லதுரை. செல்லத்துரை ஐயா என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் இவர் நேற்று மாலை மாரடைப்பால் உயிரிழந்தார். 84 வயதான இவர் சென்னையிலுள்ள அவரது வீட்டுக் கழிப்பறையில் சுயநினைவின்றி மயங்கி கிடந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஏற்கெனவே கடந்த வாரம் நடிகர் விவேக் மாரடைப்பால் மரணமடைந்ததை அடுத்து நேற்று செல்லதுரை மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பிரபல இயக்குநர் கே.வி. ஆனந்த் இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார். திரைப் பிரபலங்கள் அடுத்தடுத்த உயிரிழப்பது குறித்து பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துவருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/330Tgsz
0 Comments