Ad Code

Responsive Advertisement

நடிகை பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று உறுதி

நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

’புட்ட பொம்மா புட்ட பொம்மா’ என்ற தெலுங்கு பாடல்மூலம் தென்னிந்திய திரையுலகில் பிரபலமானவர் நடிகை பூஜா ஹெக்டே. தமிழில் ஏற்கெனவே முகமூடி படத்தில் நடித்துள்ள பூஜா ஹெக்டே, தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்பட்டுள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களையும் கொரோனா பரிசோதனை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3sR3AOk

Post a Comment

0 Comments