Ad Code

Responsive Advertisement

அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே! - விவேக்குக்கு வைரமுத்து இரங்கல்

அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே! என கவிஞர் வைரமுத்து விவேக் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே!
எல்லாரையும் சிரிக்கவைத்த கலைஞன்
அழவைத்துவிட்டுப் போய்விட்டானே!

திரையில் இனி பகுத்தறிவுக்குப்
பஞ்சம் வந்துவிடுமே!

மனிதர்கள் மட்டுமல்ல விவேக்!
நீ நட்ட மரங்களும் உனக்காக
துக்கம் அனுசரிக்கின்றன.

கலைச் சரித்திரம் சொல்லும் :
நீ ‘காமெடி’க் கதாநாயகன்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மாரடைப்பு காரணமாக நேற்று காலை 11 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் இன்று அதிகாலை 4.35 மணியளவில் உயிரிழந்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3e8UgjE

Post a Comment

0 Comments