
thaகமல் நடிப்பில் உருவாகி வரும் ‘விக்ரம்’ படத்தில் தனக்கு வந்த கதாபாத்திரம் குறித்து விஜய்சேதுபதி பேசியுள்ளார்.
இது குறித்து விஜய் சேதுபதி கூறும் போது, “ விக்ரம் படக்குழு என்னை அணுகியது உண்மைதான். அது வில்லன் கதாபாத்திரம். ஆனால் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்கான தேதிகள் இன்னும் ஒதுக்கப்படவில்லை. ஏற்கெனவே அந்த படத்தில் கமல்ஹாசன் மற்றும் பகத்பாசில் இருக்கின்றனர். அதில் நான் இணைந்தால் ஏதேனும் சிறப்பாக இருக்க வேண்டும். இல்லையென்றால் அதை செய்வதில் அர்த்தம் இல்லை” என்றார்.

தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களில் நடிப்பது குறித்து கேட்ட போது, “ ஏன் செய்யக்கூடாது? மனிதனின் எதிர்மறை பக்கங்களில் நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். அதன் மூலம் என்னுள் இருக்கும் அனைத்து எதிர்மறையான பக்கங்களிலும் வாழ்ந்து திரையில் கொண்டுவர முடியும். ஆனால் அதனை என்னுடைய இயல்பு வாழ்கையில் செய்ய இயலாது” என்றார். விஜய் சேதுபதி தமிழில் வெளியான மாஸ்டர் மற்று தெலுங்கில் வெளியான உப்பென்னா படங்களில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘விக்ரம்’. முன்னதாக தொடங்கப்பட்ட இந்தப்படத்தின் படப்பிடிப்பு, தேர்தலை முன்னிட்டு கமலின் அரசியல் செயல்பாடுகளுக்காக நிறுத்திவைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து பிரபல மலையாள நடிகர் பகத்பாசில் விக்ரம் படத்தில் இணைவதாக அறிவிப்பு வெளியானது.
Aarambikkalaangala ?#Vikram pic.twitter.com/pvOPzB2icn
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) April 7, 2021
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3e5q9JO



0 Comments