பாஜகவினர் கொலை மிரட்டல் விடுத்ததை அடுத்து நடிகர் சித்தார்த்துக்கு ஆதரவாக #IStandWithSiddharth என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
நடிகர் சித்தார்த் படத்தில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் சமூக பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்து வருபவர். சமீபத்தில் மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியமைத்தால் இலவச தடுப்பூசி போடப்படும் என்ற ட்வீட்டை பகிர்ந்து ”பாஜக எப்போது ஆட்சி அதிகாரத்திலிருந்து தூக்கி எறியப்படுகிறதோ அப்போதுதான் இந்த நாடும் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக அர்த்தம்” என்று கருத்து தெரிவித்திருந்தார். அதேபோல், ’உ.பி மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருப்பதாக பொய் சொன்னால் சட்ட ரீதியிலான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்’ என முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளதை குறிப்பிட்டு நடிகர் சித்தார்த் “ ஒழுக்கமான மனிதராக இருந்தாலும் அல்லது துறவியாக இருந்தாலும் அல்லது தலைவராக இருந்தாலும், யாராக இருந்தாலும் பொய் சொன்னால் முகத்தில் ஓங்கி ஒரு அறை விழும்” என ட்வீட் செய்திருந்தார்.
இதனால், கோபமுற்ற பாஜகவினர் சித்தார்த்தின் போன் நம்பரை சமூக வலைதளங்களில் பரப்பிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சித்தார்த், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் “என்னுடைய போன் நம்பரை பஜகவினர் பரப்பிவிட்டுள்ளனர். எனக்கும் எனது குடும்பத்திற்கும் 500 க்கும் மேற்பட்ட வன்புணர்வு மற்றும் கொலை மிரட்டல் கால்கள் வருகின்றன. அவர்கள் பேசிய கால் ரெக்கார்டுகளையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளேன்” என்று பதிவிட்டிருந்தார். சித்தார்த்தின் இந்த பதிவுக்கு பலர் ஆதரவு குரல் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், இந்திய அளவில் சித்தார்த்துக்கு ஆதரவாக #IStandWithSiddharth என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2S91zAp
0 Comments