Ad Code

Responsive Advertisement

ஏப். 14ல் மலையாள புத்தாண்டு - விக்னேஷ் சிவனுடன் தனி விமானத்தில் கொச்சின் சென்ற நயன்தாரா

மலையாள புத்தாண்டை கொண்டாட விதமாக தனி விமானத்தில் விக்னேஷ் சிவனுடன் கொச்சின் சென்றுள்ளார் நடிகை நயன்தாரா.

பிரபல படத்தொகுப்பாளர் அப்பு என். பட்டாத்திரி இயக்கத்தில் மலையாளத்தில் நயன்தாரா நடித்துள்ள ’நிழல்’ படம் நேற்று வெளியானது.

image

நயன்தாராவுக்கு ஜோடியாக குஞ்சாக்கோ போபன் நடித்துள்ள ‘நிழல்’ வெளியானதிலிருந்து நல்ல விமர்சனங்களையும் பாராட்டுக்களையும் குவித்து வருகிறது.

image

இந்நிலையில், நயன்தாரா இன்று தனி விமானத்தில் கொச்சின் சென்றுள்ளார். இதன் வீடியோவை நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் தனது ன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்திருக்கிறார். கேரளாவில் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி மலையாள புத்தாண்டான விஷு பண்டிகைக் கொண்டாடப்படுகிறது.

image

ஏற்கனவே, விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி கடந்த ஆண்டு ஓணம் பண்டிகையை தனி விமானத்தில் சென்று கொண்டாடினார்கள் என்பதால், மலையாள புத்தாண்டை கொண்டாட சென்றுள்ளனர். இதனை முடித்து வந்தபின்னர் ரஜினியின் ‘அண்ணாத்த’, விஜய் சேதுபதியின் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ பட ஷூட்டிங்கில் கலந்துகொள்ளவுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3wIa859

Post a Comment

0 Comments