Ad Code

Responsive Advertisement

‘மாஸ்டர்’ 100 வது நாள் கொண்டாட்டம்; இயக்குநர் ரத்னகுமார் பகிர்ந்து கொண்ட ஸ்வீட் மெமரீஸ்!

’மாஸ்டர்’ படத்தின் நூறாவது நாளையொட்டி தனது பிறந்தாளை விஜய்யுடன் கொண்டாடிய புகைப்படங்களை பகிர்ந்துகொண்டுள்ளார் இயக்குநரும் ‘மாஸ்டர்’ படத்தின் வசனகர்த்தாவுமான ரத்னகுமார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யின் ‘மாஸ்டர்’ பொங்கலையொட்டி வெளியானது. விஜய் சேதுபதி,மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்த இப்படத்தில் விஜய் - விஜய் சேதுபதியின் நடிப்பு கவனம் ஈர்த்தது. அனிருத் இசையில் ‘வாத்தி கம்மிங்’ பாடல் இப்போதுவரை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்களும் பிரபலங்களும்.

image

கொரோனா சூழலில் வெளியான படங்களில் வசூலைக் குவித்த படம் என்ற பெருமையும் ‘மாஸ்டர்’ படத்திற்கு இருப்பதால், நூறாவது நாளையோட்டி விஜய் ரசிகர்கள் இன்று “#100DaysOfBBMaster” என்ற ஹேஷ்டேக்கில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். இப்படத்திற்கு கூடுதல் வசனகர்த்தாவாக பணியாற்றினார் ‘மேயாத மான்’, ‘ஆடை’ உள்ளிட்டப் படங்களின் இயக்குநர் ரத்னகுமார்.

image

இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் ‘மாஸ்டர்’ படம் வெளியாகி 100 நாட்கள் ஆவதையொட்டி விஜய்யுடன் கேட் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ள ரத்னகுமார் ”Cake வெட்டுவதை கடா வெட்டுவது போல் நினைத்து வெட்டும் முன் கும்பிட்ட தருணம். First time in my life my Birthday was made Memorable. Thank you விஜய் சார், நண்பன் லோகேஷ் கனகராஜ்” என்று பதிவிட்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3dGzIzX

Post a Comment

0 Comments